தமிழகத்தில் தொடர்ந்து இறங்கு முகத்தில் கொரோனா… இன்று 3536 பேருக்கு தொற்று.. சென்னையில் மீண்டும் ஆயிரத்திற்கு கீழானது.!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது.நேற்று 3914 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று 3536 ஆக மேலும் குறைந்துள்ளது. சென்னையில் மீண்டும் ஆயிரத்திற்கு குறைவாக தொற்று பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் கடந்த சில நாட்களாகவே இறங்குமுகவே உள்ளது. கடந்த ஒரு வாரமாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4515 ஆகும்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 49 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 1036 ஆக பதிவான நிலையில் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் குறையத் தொடங்கி 885 ஆக பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சென்னைக்கு அடுத்து அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. கோவையில் இன்று 290 பேருக்கும், செங்கல்பட்டில் 241 , சேலம் 191, திருவள்ளூர் 172, திருப்பூர் 140 என இந்த 6 மாவட்டங்களில் மட்டுமே நூறு எண்ணிக்கைக்கு மேலாக தொற்று பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





