குடிபோதையில் தெருவில் விழுந்து மண்ணை அள்ளி சாப்பிட்ட நபர்..!
மதுரையில் குடிபோதையில் தெருவில் விழுந்து பிரியாணி சாப்பிடுவது போல மண்ணை அள்ளி தின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செல்லூர் பகுதியில் போதை தலைக்கேறிய நிலையில் சைக்கிளை ஓட்ட முடியாமல் கீழே விழுந்த குடிமகன் ஒருவன் மண்ணை அள்ளி பக்குவமாக ஊதி தெளித்து திண்ண தொடங்கினார்.
பலமுறை எழுந்திருக்க முடியாமல் மண்ணை கவ்விய அவர் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல மண்ணை விரும்பித்தின்பதாக காட்டிக் கொண்டார். சாலையில் சென்ற சிலர் தரையில் விழுந்து கிடந்த அந்த குடிமகனை தூக்கி நிறுத்தினர்.
இதனை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்ததை பார்த்த அந்த நபர் வீடியோ எடுத்து ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் இல் போட்டு விடப் போறீங்களா என கூறியபடி தள்ளாடித் தள்ளாடி சென்றது தான் ஹைலைட்.






