தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5928 பேருக்கு தொற்று பாதிப்பு..! உயிரிழந்தோர் 96 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா பாதிப்பு நிலவரம் ஏற்ற இறக்கமின்றி சராசரியாக தினமும் 6 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பும், உயிரிழப்பு நூறு என்ற அளவிலும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 96 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாகத் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,74,172 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1.36 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 73,155 பேருக்கும், இதுவரை 47,26,022 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






