கொரோனா நிவாரணம் 2,000 ரூபாய் இன்று முதல் விநியோகம்..!
தமிழகத்தில் கொரொனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
இந்த நிவாரணத்தை வழங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு தேதி குறிப்பிட்டு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிவாரண பொருட்கள் மற்றும் இரண்டாயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பொருட்கள் இந்த மாத இறுதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றனவா என மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று நிவாரணமாக அளிக்கப்படும்.
மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் முதல் தவணையாக 2000 ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது. பின்னர் கொரொனா நிவாரணமாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.






