--- --:--:-- --

கொரோனா தடுப்பு நடவடிக்கை : ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!!

eps4

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 40 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 738 பேர் பாதிக்கப்பட்டு, 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இதன் ஒரு கட்டமாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 40 கொண்ட 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்ப்டடு, பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். கடந்த மார்ச் 30-ந் தேதி இந்தக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக ஆலோசனை நடத்தினார்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாளை முதல் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு லட்சம் அதிவிரைவு சோதனைக் கருவிகள் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, வரும் 14-ந் தேதி முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில், மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்பதும் உறுதியாகியுள்ளது.

 

இதனால் தமிழகத்தில் கொரோனா தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க 12 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் மேற்கொள்ளப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள், அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு நிலவரம், விலைவாசி உயர்வதை கட்டுப்படுத்த பதுக்கலை தடுப்பது உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்திய தாக தெரிகிறது.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதார அமைச்சர் விஜய் பாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோரும் பற்கேற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon