தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது..! இன்று 6785 பேருக்கு தொற்று உறுதி..! மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டுகிறது!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 6,785பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தினசரி பாதிப்பு 5 ஆயிரம் பிளஸ் என்று இருந்த நிலையில் நேற்றும், இன்றும் 6 ஆயிரம் பிளஸ் என ஜம்ப் ஆகியுள்ளது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழகத்தில் இன்று 6785 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,99,749 என உயர்ந்து 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் இன்றும் 1,299 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக விருதுநகர் 424, செங்கல்பட்டு 419, திருவள்ளூர் 378, காஞ்சிபுரம் 349,மதுரை 326, தூத்துக்குடி 316 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.”
இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6,504 ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,43,297ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 88 என்ற நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

https://www.kuttramkuttrame.com/2020/07/24/will-schools-open-in-september/
மேலும் படிக்க..
\





