--- --:--:-- --

கொரோனா – அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவது அவசியம்

12

வெளிநாடுகளிலிருந்து கொரொனா பாதிப்புடன் வந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தொற்று பரவ தொடங்கியுள்ளதால் அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் அனைவரும் நிச்சயம் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவும் போது உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் கூறியுள்ளார்.

 

நாடு முழுவதும் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 69 ஆயிரத்து 436 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பதாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon