ஒலிம்பிக்கில் பங்கேற்ற மூன்று வீரர்கள் உட்பட 10 பேருக்கு கொரொனா தொற்று..!
ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள மூன்று வீரர்கள் உட்பட 10 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் வரும் 23ஆம் நாள் ஒலிம்பிக் தொடங்க உள்ள நிலையில் கொரொனா தொற்று தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒலிம்பிக் நிர்வாகி ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது 3 வீரர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஹோட்டல் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மூவர், பத்திரிக்கையாளர், ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை ஒலிம்பிக் பணியிலிருக்கும் 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் பலர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.





