பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய பெண்ணுக்கு கொரொனா தொற்று உறுதி..!
பிரிட்டனிலிருந்து திரும்பிய ஆந்திர பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் ரயிலில் பயணித்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பிரிட்டனில் உருமாறிய கொரொனா வைரஸ் பரவிவரும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் பிரிட்டனில் அவரது கணவரை சந்தித்துவிட்டு விமானம் மூலம் டெல்லிக்கு வந்து உள்ளார். அங்கு அவருக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
ஆனால் அங்கிருந்து தப்பிய அந்த பெண் ரயில் மூலம் ஆந்திராவை வந்தடைந்தார். இது குறித்த தகவல் அறிந்த ஆந்திர சுகாதாரத்துறையினர் அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை மருத்துவமனையில் தனிமைப் படுத்தி உள்ளனர்.
மேலும் அந்தப் பெண் பயணம் செய்த ரயில் பெட்டியை உடன் பயணித்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனில் உருமாறிய பி117 கொரொனா தொற்று சிங்கப்பூரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவி உருமாறிய கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அங்கு சமூக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






