தமிழகத்தில் இன்று 34,285பேருக்கு கொரோனா தொற்று உறுதி..468 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தற்போது 3,06,652 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 19,272 ஆண்களும், 15,013 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 4041 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இந்த எண்ணிக்கை 3632 -ஆக உள்ளது. செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, விருதுநகர் மாதிரியான மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில்28,745 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 468 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.





