ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் கொரொனா ஹேர்ஸ்டைல்!
உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் சிகை அலங்காரம் வேகமாக பரவிவருகிறது. கென்யாவின் ஏராளமானோர் கொரொனா ஹேர் ஸ்டைலுக்கு மாறி வருகின்றனர்.
நைரோபியில் செயல்படும் பிரத்தியேக முடிதிருத்தும் நிலையங்களில் தாமாகவே முன்வந்து இதுபோன்று முடியை திருத்தி கொள்கின்றனர். ஆப்பிரிக்க மக்களின் தலைமுடி எந்த வகையான அலங்காரத்திற்கும் ஏற்றார் போல் உள்ளதால் பல ஆப்பிரிக்க நாடுகள் கொரொனா ஹேர் ஸ்டைலை பின்பற்றி வருகின்றன.






