--- --:--:-- --

ராமநாதபுரம் மாவட்டத்தை குளிர வைத்த கோடை மழை!

3

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று தென் மாவட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

 

கோடை வெயில் கொளுத்திய நிலையில், மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்தனர். கடந்த வாரம் லோசான மழை பெய்தது.

 

இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பரவலாக பெய்த மழையால்  தெருக்களில் நீர் பெருக்கெடுத்தது.

 

மேலும் இந்த கோடை மழையால், விவசாய பணியில் விவசாயிகள் ஆர்வத்துடன் களமிறங்கி உள்ளனர். தற்போது மிளகாய் சீசன் நிறைவு பெறுவதால், நிலத்தை உழுது சிறு தானியங்கள் உளுந்து, பணிப்பயர், நிலக்கடலை, பயிரிட தயராகின்றனர்.

 

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, தொண்டி, திருவாடானை உள்ளிட்ட
பல இடங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது.

 

மேலும் மங்களக்குடி, திணைக்காத்தான்வயல், கீழக்கோட்டை, உட்பட பல்வேறு கிராமங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon