சென்னையில் திரைப்பட பின்னணி பாடகருக்கும் அவரது மனைவிக்கும் கொரொனா!
சென்னையில் திரைப்பட பின்னணி பாடகருக்கும் அவரது மனைவிக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னணி பாடகர்களும், இசைக்கச்சேரி கலைஞர்களும் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக சென்னை வடபழனி சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் ஃபேஸ்புக் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேலாக இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரொனா தொற்று சோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்த பாடகர்களையும் இசைக் கலைஞர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.







