--- --:--:-- --

கொரோனா பாதிப்பு மோசத்திலிருந்து படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..!

1

நாட்டில் கொரோனா பாதிப்பு மோசத்திலிருந்து படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் மொத்த நாடுமே பெரும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் இந்தச் சூழலில் மெத்தனம் என்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

நேற்று நாள் முழுவதும் புதிதாக 56.711 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த மதிப்பு ஒரு கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 855 ஆக இருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயூக் சுகாதாரத்துறை உறுப்பினர் பிகே பால் மருத்துவமனைகளும் அவசர சிகிச்சை பிரிவுகளில் தயார் செய்யப்படவேண்டும் என கூறினார்.

 

மாநிலங்கள் மாவட்ட வாரியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துவதன் மூலம் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon