கழிவறை அருகே சமையல்..ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அவல நிலை..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சமையலறை சிலிண்டர் வழங்காததால் பள்ளி குழந்தைகளுக்கு திறந்த வெளியில் சமையல் செய்து வருகின்றனர்.
பூமாரமங்கலம் பொது ஊரில் செயல்பட்டு வரும் தொடக்க பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு சமைப்பதற்காக அனைத்து வசதிகளும் உள்ளன.
இருப்பினும் சிலிண்டர் இல்லாததால் கழிவறை அருகே திறந்த வெளியில் சமைத்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






