--- --:--:-- --

விளையாடச் சென்ற 9 வயது பள்ளி மாணவன் சடலமாக மீட்பு..!

10

ண்ருட்டி அருகே விடுமுறை நாளில் விளையாடச் சென்ற 9 வயது பள்ளி மாணவன் திடீரென மாயமான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் ஏரியில் சடலமாக சிறுவனின் உடலை மீட்டுள்ளனர்.

 

கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சாமுவேல் பொருட்களை தம்பதியின் 9 வயது மகன் கிஷோர் தந்தை சாமுவேல் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் தாயின் வளர்ப்பில் இருந்து வரும் கிஷோர் பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

 

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மற்ற சிறுவர்களுடன் விளையாட சென்றிருந்த பொழுது விளையாடிய சிறுவர்கள் மாலை நேரமாகி வீட்டிற்கு வந்த நிலையில் சிறுவன் கிஷோர் மட்டும் வீடு திரும்பாமல் வாதாடினார்.

 

சிறுவர்கள் விளையாடும் இடம் ஏரி குளம் என பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து மாயமான சிறுவனை இரவு முழுவதும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் பக்கத்து ஊரான ஏழை மேடு ஏறிப் பகுதியில் சிறுவன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். சிறுவன் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon