--- --:--:-- --

அதிமுகவினர் சர்ச்சைப் பேச்சு – மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

1

திமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேற்று பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பேச்சை விமர்சித்துள்ளார். திமுக அரசை கண்டித்து நேற்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

 

இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் மன்னிப்பு கோரியதாக அதிமுக ஐ.டி. விங் தெரிவித்திருக்கிறது. இதேபோல் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” எனத் தெரிவித்து விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் – செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon