முஸ்லீம் கடைக்கு சாப்பிட போவாதீங்க என சர்ச்சை கருத்து..!
இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் பேசியதால் இரண்டாவது முறையாக கேரள காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் கலந்துகொண்டார்.
அப்பொழுது பேசியவர் இஸ்லாமியர்கள் நடத்தும் உணவு விடுதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அவர் பேசிய கருத்துக்கள் பொறுப்புணர்வு மற்றும் மத வெறியை தூண்டும் வகையில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே ஒருமுறை அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது இரண்டாவது முறையாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






