--- --:--:-- --

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை..!

1

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.

 

திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

 

அதற்காக ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

 

அரசியல் கட்சியினர் இந்த கூட்டத்தில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சி பிரதிநிதிகளின் கருத்தை அறிந்து அதற்கேற்ப தேர்தல் தேதி வெளியிட முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon