--- --:--:-- --

கோழி கறி சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!

2

கோழி கறி சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கட்டட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பூச்சிகாலனி பகுதியை சேர்ந்தவர் 56 வயதான சுப்பிரமணியம்.

 

முனிராஜ் என்பவரின் வீட்டில் கோழி கறி குழம்பு மதியம் சாப்பிட்டுள்ளார். திடீரென மூச்சு விட முடியாமல் அவர் தவித்துள்ளார். வாயிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து அவரை உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

கோழி கறி சாப்பிடும் பொழுது தொண்டையில் மாட்டி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாரடைப்பு காரணமாக இறந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உடற்கூறு ஆய்விற்கான முடிவுகள் வந்த பிறகுதான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon