காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்..!
காங்கிரஸ் கட்சியின் மூணு நாள் ஆலோசனை கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து தொடங்க உள்ளது. இதில் நாடெங்கிலும் இருந்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 15,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனை கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மட்டும் இன்றி கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
வரும் மக்களவை தேர்தலுக்கான செயல் திட்டம் குறித்து இந்த கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





