அரசு பேருந்தில் ஏற்பட்ட பெரிய ஓட்டை..பயணிகள் அச்சம்..!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கருங்கல் இடையே இயக்கப்படும் அரசு பேருந்தின் தரைத்தளத்தில் உள்ள மிகப்பெரிய துளையால் மர்ம அபாயம் எழுந்துள்ளது.
தக்கலையில் இருந்து கோழிக்கோடு வரை கருங்கல் பகுதிக்கும் அங்கிருந்து மீண்டும் தக்கலைக்கும் இந்த அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பயணிகள் இருக்கையில் தரைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறிய அளவிலான துவாரம் ஏற்பட்டது.
அந்த துளை சரி செய்யப்படாததால் துவாரம் பெரிதாகியுள்ளது. பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே சிறுவர்கள் யாரேனும் துவாரத்துக்குள் சிக்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.





