--- --:--:-- --

தொண்டி அரசு பள்ளியில் கணினிகள் திருட்டு

317329ad-d765-4ed4-a17c-c4f5ebb9a61d

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள செய்யது முஹம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரவு மர்ம நபர்கள் அறையின் பூட்டை உடைத்து அதில் இருந்த கணினிகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் காலையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியை விமலாதேவி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்த தலைமை ஆசிரியர் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் அங்கு வந்ததொண்டி காவல் துறையினர் உதவி ஆய்வாளர் சரவணன், தனிப்பிரிவு காவலர் துரை உட்பட ஏராளமான போலிசார் பள்ளிக்கு விரைந்து வந்து கணினிகள் திருட்டு போன அறைகளை பார்வையிட்டனர்.

 

பின்னர் ராமநாதபுரத்தில் இருந்து யூசுப் தலைமையில் வந்த கைரேகை நிபுனர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ரோமியோ வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகம் முதல் பள்ளி வெளியே சாலை வரை ஓடி நின்றதாக கூறப்படுகிறது இந்நிலையில் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon