--- --:--:-- --

வரதட்சணை கேட்டு முடியை வெட்டி அடித்து துன்புறுத்துவதாக புகார்..!

2

லால்குடி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை அடித்து உதைத்து கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சமயபுரத்தில் நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் என்பவருக்கு சாவித்திரி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

 

வரதட்சணை கேட்டு கணவர் மாமியார், மாமனார் என மூவரும் அந்த பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனடிப்படையில் மாமியார் அந்த பெண்ணுடன் சண்டையிட தகாத வார்த்தையால் பேசியதுடன் தலைமுடியை கத்தரிக்கோலால் வெட்டி கொடுமை படுத்துவதாகவும் செல்லப்படுகிறது. தாலி கட்டிய கணவனுக்கு தன் பங்கிற்கு அந்த பெண்ணை கட்டையால் அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவரை கைது செய்ததுடன் அவரது தந்தை தாயையும் தாயையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Right Menu Icon