நாமக்கலில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது புகார்..!
நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்பு மூலம் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் அளித்த புகார் குறித்து விளக்கமளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர், ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குழந்தைகள் நல பாதுகாப்பு உரிமை ஆணையத்தில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து புகாருக்குள்ளான ஆசிரியர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்குமாறு தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் பேசியபோது எந்த மாணவியும் புகார் அளிக்கவில்லை என்றும் தங்களுக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என்றும் கூறினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதாவிடம் கேட்டபோது சென்னையில் இருந்து உத்தரவு வந்தால் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.






