--- --:--:-- --

கொரொனாவில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு அலர்ஜி நோய் பாதிப்பு..!

7

கொரொனா தொற்றுக் ஆளான குழந்தைகளுக்கு பின்னாளில் எம் ஐ எஸ் சி எனப்படும் அலர்ஜி நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் .

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில் இந்த மீண்ட குழந்தைகளுக்கு மல்டி சிஷ்டம் என்ப்லமேட்ரி சிண்ட்ரோம் எனப்படும் அலர்ஜி நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார். இதுவரை நாடு முழுவதும் இந்த வகை நோயால் ஐந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கூறுகிறார்.

 

இந்தவகை நோய்களால் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

 

தொற்றுக்கு நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த நோய் ஏற்படுகிறது என்று குறிப்பிட்ட அந்த மருத்துவர் கிருமிகளை எதிர்த்து போரிட குழந்தைகளின் உடம்பில் ஆக்ஸிஜன்களின் உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon