அன்புமணியை நீக்க குழு அமைப்பு: ராமதாஸ்
பாமகவின் தலைவராக இல்லாத அன்புமணி பொதுக்குழுவை நடத்தியது தவறு என ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க (அ) சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த மே 30-ம் தேதி முதல் கட்சியின் நிறுவனரான தானே தலைவராகவும் செயல்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.





