--- --:--:-- --

கல்லூரி பேராசிரியர் ஓட்டி பழகி வந்த கார் மோதி படுகாயமடைந்த மாணவி..!

3

காஞ்சிபுரத்தில் கல்லூரி பேராசிரியர் ஓட்டி பழகி வந்த கார் மோதி படுகாயமடைந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மதுரை பேட்டையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வரும் தமிழரசன் கல்லூரி மைதானத்தில் காரோட்டி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவி நந்தினி மீது தமிழரசனின் கார் மோதியது.

 

படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon