--- --:--:-- --

கோவை : கருமத்தம்பட்டி அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள தனது 1.50 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய நல்ல மனம்.குவியும் பாராட்டுக்கள் !!!

10.1

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சியை அடுத்துள்ளது எலச்சிபாளையம்.1957-ம் ஆண்டு இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது.தற்போது இப்பள்ளியில் 174 மாணவர்கள் படித்துவருகின்றனர்.

 

ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக அந்தப் பள்ளியின் தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் உயர்பள்ளி கல்விக்கு சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் பல கி.மீ பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.அந்தப் பகுதி மக்களும் பள்ளியை தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலம் இருந்தால் அரசு கட்டித்தருவதாகவும் அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அப் பகுதியைச்சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது 1.50 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார். அந்தப்பள்ளி ஏற்கெனவே இயங்கி வரும் இடமும், ராமமூர்த்தி குடும்பத்தினர் தானமாக வழங்கியது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராமமூர்த்தியின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்த நிலையில் ராம மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊர் மக்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தியிருக்கின்றனர். இவ்விழாவில் ராமமூர்த்திக்கு நினைவுப்பரிசு வழங்கி, தானமாக வழங்கிய இடத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

 

இதுகுறித்து ராமமூர்த்தி கூறுகையில் இப் பகுதியில் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கிறது.அரசு உடனடியாக அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும்,தங்களது பகுதியில் உள்ள இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர தயாராக இருப்பதாகவும்,
பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Right Menu Icon