--- --:--:-- --

கோவை கார் குண்டுவெடிப்பு.. 12வது நபர் கைது..!

3

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 12 வது நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி காரில் குண்டு வைத்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த நபரின் நெருங்கிய நண்பரான இத்தீஸ் செய்பவர் 12வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படும் நிலையில் கோவை புலனாய்வு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரது கைபேசி கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளே விசாரணைக்கு ஆதாரமாக எடுக்கப்பட்டது.

 

Right Menu Icon