கோவை : இருகூரில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீ.பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம் !!!
ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான லாரியில் கோவை அருகே உள்ள இருகூருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. ஆனால்,இருகூரில் உள்ள பஞ்சு மில்லில் பஞ்சு மூட்டைகளை வேண்டாம் என்று திருப்பி அனுப்பியதால் மீண்டும் ஊத்துக்குளி யை நோக்கி செல்வதற்காக ஓட்டுநர் வடிவேல் ( வயது 27 ) லாரியை திருப்பியுள்ளார்.
அப்போது,எதிர்பாராத விதமாக அருகில் உள்ள மின்சார கம்பி மீது உரசியதால் திடீரென்று தீ பிடித்தது. பஞ்சில் பிடித்த தீ காற்றின் வேகம் காரணமாக மளமளவென்று பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இதனால் லாரியை ஓட்டுநர் வடிவேர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பியுள்ளார். பின்னர்,இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த சூலூர் மற்றும் பீளமேடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அதிகாரி கோபால் தலைமையில் 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த 15 தீயணைப்பு வீரர்கள் பெரும் போரோட்டத்திற்கிடையே தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.ரூபாய் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள லாரி காப்பாற்றப்பட்டது.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







