--- --:--:-- --

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக உறுப்பினர் அட்டை… ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் கேலிக்கூத்து..!

xv

திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் அமெரிக்க அதிபரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக தரப்பில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. புதுமை முயற்சியாக திமுக சார்பில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரமாக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது.

ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில், மொபைல் எண் கொடுத்து ஓடிபி மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக்க முடியும். ஒரு வாரத்திலேயே 3 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்ததாக திமுக தரப்பில் பெருமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.. திமுகவில் உறுப்பினர் ஆவது எளிமைப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இதில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

 

ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் கேலிக்கூத்து

 

 

ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலெயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திமுகவில் சேர்ந்ததாக அவருடைய உறுப்பினர் அட்டை வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியும் திமுகவில் சேர்ந்ததாக உறுப்பினர் அட்டைப் பெற்ற தகவலும் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரிலும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது தான் ஹைலைட்.எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ந் தேதி திமுக கட்சியில் இணைந்ததாகவும், அவருடைய தந்தை பெயர், வயது, ஊர் முதற்கொண்டு பக்காவான தகவல்களுடன் உறுப்பினர் அட்டை வெளியாகியுள்ளது.

 

இதனால் ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை விவகாரம் சந்தி சிரிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இன்னும் இப்படி யார் ? யாரெல்லாம் திமுகவில் இணைந்ததாக கூறப்பட உள்ளதோ? என்ற அளவுக்கு திமுக உறுப்பினர் சேர்க்கை விவகாரம் கேலிக்கூத்தாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon