--- --:--:-- --

தமிழகத்தில் 38-வது மாவட்டம் உதயம்..!நாகை மாவட்டத்தை 2 ஆக பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம்!!

தமிழகத்தில் 38-வது மாவட்டம் உதயம்..!நாகை மாவட்டத்தை 2 ஆக பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம்!!

நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, சமீப காலமாக மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக் குறிச்சி மாவட்டம் உதயமானது.நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு தனி மாவட்டமானது.வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.

 

இந்நிலையில் நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. அதுவும் இன்று நிறைவேறியுள்ளது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகிறது.

Leave a Reply

Right Menu Icon