--- --:--:-- --

நாட்டை உலுக்கிய மருத்துவ மாணவி கொலை வழக்கில் ப்ளூடூத் மூலம் கிடைத்த துப்பு..!

8

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதல்நிலை மாணவி ஒருவர் வியாழக்கிழமையன்று இரவு நேர பணியில் இருந்துள்ளார். பின்னர் அந்த மாணவி உடலில் காயங்களோடு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது. உறுதியானதைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகையை கைது செய்யுமாறு கோரிக்கைகளும் வலுத்தன.

 

இந்த நிலையில் குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஹெட்போன், கொலையாளியின் செல்போனுடன் தானாக கனெக்ட்டானதன் பெயரில் போலீசார் துப்பு துலக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து கொலையாளி சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சிசிடிவி காட்சிகளில் சஞ்சய் இருக்கும் ஆதாரங்கள் இருந்தாலும் அவரின் ப்ளூடூத், ஹெட்போன் முக்கிய ஆதாரமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon