வரும் 22ஆம் தேதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கப்படும்..!
சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மொழியின் வளர்ச்சிக்காக இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் கருத்தரங்குகள், நிர்வாகப் பிரிவு ஒலி, ஒளி காட்சி கூடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
24 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 70,000 சதுரஅடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் உள்ள இந்த நிறுவனத்தில் பல அரிய நூல்களும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களும் அரிய ஓலைச்சுவடிகளும் உள்ளன. எனவே இதனை பார்வையிட்ட பின் வரும் 22ஆம் தேதி செம்மொழித்தமிழ் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.






