எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா..!
இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் அத்துமீறி சீனா புதிய கிராமங்களை உருவாக்கி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. சீனாவுக்கு தக்க பதிலடி தர இந்தியாவும் தனது ராணுவ பலத்தை கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஒருபுறம் எல்லையில் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தும் சீனா மறுபுறம் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையில் அத்துமீறி புதிய கிராமங்களை உருவாக்கி வருகிறது சீனா.
அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை எழுப்பி இருக்கிறது சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இதனால் உஷாரான இந்திய ராணுவம் சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி தர தயாராக இருக்கிறது. குறிப்பாக ஹிமாச்சல பிரதேசம் உத்தரகாண்ட் மாநில எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது.






