சபரிமலைக்கு செல்ல முயன்ற பிந்து மீது மிளகாய் பொடி வீச்சு
சபரிமலைக்கு செல்ல முயன்ற கேரளாவை சேர்ந்த பிந்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது மிளகாய் பொடி தூவப்பட்டது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், கோவிலுக்கு செல்ல எர்ணாகுளம் காவல் ஆணையர் அலுவலகம் அருகே சென்ற பிந்து மீது எதிர்ப்பாளர்கள் சிலர் மிளகாய் பொடியை தூவினர்.
அப்போது அந்த சம்பவத்தை நிகழ்த்தியவருக்கும் பிந்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.





