--- --:--:-- --

ஓடியாடி வேலை பார்த்த இளைஞருக்கு வாழ்க்கையை புரட்டிப்போட்ட தலைவலி

11

தூணாக இருந்து குடும்பத்தை தாங்கி வந்த இளைஞரை அரிய வகை நோய் முடக்கிப்போட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட வலி இடுப்புக்கு கீழ் பகுதியில் செயலிழக்கச் செய்து இருப்பதோடு அவர் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு வரை ஓடி ஆடி வேலை பார்த்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தந்த கோபி தற்போது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் திடீரென ஏற்பட்ட தலைவலி அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி கிராமத்தை சேர்ந்த கோபி சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயின் உழைப்பிலேயே டிப்ளமோ படித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் வேலைக்கு சென்று குடும்பத்தை சற்று முன்னுக்கு கொண்டு வந்த நிலையில் குறுக்குவெட்டு அழற்சி என்ற அரிய வகை நோய் அவரை முடக்கிப் போட்டது.

 

மாதந்தோறும் சிகிச்சைக்கு மூன்றாயிரம் ரூபாய் வரை செலவாகி விடுவதாக கூறும் கோபி அமர்ந்தவாறே சுயதொழில் தொடங்க உதவி புரிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
குறுக்குவெட்டு அழற்சி என்று அறிய வகை நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்பதே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Right Menu Icon