தஞ்சையில் 50 ஆயிரத்திற்காக இருவர் வெட்டிக்கொலை?
தஞ்சையில் அரசு ஊழியரான வனிதா என்பவரும் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நபரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த காமராஜ் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.
அவரது மனைவி வனிதாவுக்கு வாய்ஸ் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது .இவர் தனது மூன்று குழந்தைகளுடன் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கனகராஜ் என்ற திருமணமான நபருடன் வனிதா சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிற்குள் இருவரும் வெட்டிக்கொள்ளப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கொல்லப்பட்ட வனிதா தனது உறவினரான பிரகாஷ் என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்ததாகவும் ஒன்றரை லட்சம் ரூபாயை தந்த நிலையில் மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அடிக்கடி பணம் கேட்டு அலைந்த பிரகாஷ் வனிதா மீது தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சூழலில் வனிதாவும் கனகராஜ் வெட்டிக்கொல்லப்பட்டதால் பணப் பிரச்சினை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





