சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மோசடி..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியை ஏமாற்றி ஒருவர் சில்லரை வாங்கி சென்றுள்ளார். புதுப்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – லட்சுமி தம்பதி தேநீர் கடை நடத்தி வருகின்றனர்.
100 ரூபாய்க்கு சில்லறை வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் இல்லாததால் அவர் கொடுத்த தாளை வாங்கிக்கொண்டு பன்னீர்செல்வம் சில்லறை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். மின்சாரம் வந்தவுடன் தாளை பார்த்த பொழுது சாக்லேட்டில் கிடைக்கும் ரூபாய் நோட்டு என்பது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.





