கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்கக்கோரி முதல்வர் கடிதம்..!
கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் சங்கம் அனுப்பிய மனுவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கர்நாடக அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் தமிழ்வழிப் பள்ளிகளை தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் பிறமொழி பள்ளிகளாக மாற்றப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.






