சிறையில் இருந்த ரியா சக கைதிகளுக்கு யோகா வகுப்பு எடுத்துள்ளார்..!
சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி சிறையில் இருந்தபோது சக கைதிகளுக்கு யோகா வகுப்புகளை எடுத்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புகாரில் கைதான நடிகை ரியா 28
நாட்களுக்கு பின்னர் புதன்கிழமை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார்.
சிறையில் சாதாரண கைதிகளைப் போலவே ரியா இருந்ததாகவும் , கொரொனா சூழலால் வீட்டு உணவு கிடைக்காததால் சிறை சூழலுக்கு ஏற்ப ரியா தன்னை மாற்றிக் கொண்டதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும் ரியாவை வங்க புலி என புகழ்ந்திருக்கும் அவர் தன் மீதான மதிப்பை மீட்டெடுக்க போராடுவதாகவும் கூறியுள்ளார். ராணுவ வீரர் போரை சந்திப்பது போல தன்னை வீழ்த்த முயல்வொருடன் ரியா போரிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.






