முதியோர் ஓய்வூதிய மாதம் ரூ.3,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு..!
ஜனவரி 1ஆம் தேதி முதல் முதியோர் ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பி வைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது பேசியவர் நான்காண்டுகள் ஆட்சியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் 99% வாக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஜனவரி 1 முதல் முதியோர் ஓய்வு ஊதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று மார்ச் மாதத்தில் தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





