நண்பர்களோடு சைக்கிளிங் சென்ற முதலமைச்சர்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை இன்று மிதிவண்டியில் சென்றார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் மிதிவண்டியில் செல்வது வழக்கம்.
வழக்கம் போல் இன்று மாமல்லபுரம் வரை மிதிவண்டியில் சென்ற அவருடன் நண்பர்களும், பாதுகாவலர்களும் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





