--- --:--:-- --

திருமண வரன் தேடிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!

1

திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமான பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் மணமகன் தேடுவதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதை பார்த்த ராகுல் என்ற நபர் அந்த இளைஞர்கள் இளம் பெண்ணுடன் பேசியுள்ளார்.

 

அப்பொழுது திருமணம் தொடர்பாக நேரில் பேச வேண்டும் என்று அந்த பெண்ணை அழைத்து சென்றார். அங்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்த ராகுல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவலர்கள் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon