--- --:--:-- --

புதிய திட்டத்தை தொடக்கி வைக்கும் முதலமைச்சர்..!

4

கைத்தறி மற்றும் ஊரக தொழில் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் இறையன்பு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஊரக தொழில் துறை அமைச்சர் தாமோதரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தீபாவளி சிறப்பு விற்பனையாக தமிழ்தறி பட்டுப்புடவை அறிமுகம் செய்யப்பட்டது.

 

காதிகிராஃப்ட் நிறுவனத்தின் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய புதிய செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார். ஊரக தொழில் துறை சார்பில் சாயல்குடியில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பனை தயாரிக்கும் பயிற்சி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Right Menu Icon