--- --:--:-- --

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!

4

க்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார். முதலமைச்சரிடம்உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக நலன் மற்றும் மறுவாழ்வு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

அப்பொழுது உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்து பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் மூலமாக அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கமளித்தனர்.

 

Right Menu Icon