நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
அமெரிக்கா மற்றும் சென்னை தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்ல உள்ள சிறுமியை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையம் வாயிலாக அறிவியல் தேர்வு நடத்தப்பட்டது.
அமெரிக்கா மற்றும் சென்னை தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அபிநயா வெற்றி பெற்று நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து அபிநயாவின் சாதனையை பாராட்டியும் அதை ஊக்குவிக்கும் வகையிலும் 2 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உத்தரவிட்டுள்ளார்.





