இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் இன்று முதல் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்ல உள்ளார். விழுப்புரத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் மூன்று மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அரசின் திட்டங்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நகர்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி, மருத்துவம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.





