--- --:--:-- --

10 ஆயிரத்து 62 கோடி ரூபாய் முதலீட்டில் 9 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ..!

10

10 ஆயிரத்து 62 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒன்பது புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார் .

 

தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் காணொளி மூலம் ஆயிரத்து 189 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கியுள்ள ஏழு தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் முதலமைச்சர் அரசு முறை பயணமாக துபாய் சென்ற போது மேற் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டமும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களும் அடங்கும். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சம்பத் இன்று நடைபெற்ற நிகழ்வின்போது 16,545 பேருக்குவேலைவாய்ப்பு கிட்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon